ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் குழுவில் இந்தியா.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி கட்டமைக்கும் குழுவில் இந்தியா இரண்டாவது முறையாக இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக அமைதி திட்டத்திற்கான இந்தியாவின் தீவிரப் பணியை கருத்தில் கொண்டு இரண்டாவது முறையாக இந்தியாவும் ஆணையத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியா அளிக்கும் ஆதரவின் அடிப்படையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் அமைதி கட்டமைக்கும் ஆணையத்தில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அறிவித்துள்ளார்.
உலக அமைதிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் குழுவாகச் செயற்படும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் ஆணைக்குழுவில் 31 நாடுகள் உள்ளடங்குவதாகவும், 7 உறுப்பு நாடுகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா அமைதி காக்கும் பணிக்கு ராணுவ வீரர்களை வழங்கும் 5 முக்கிய நாடுகளும் ஆணைக்குழுவில் உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.