பார்வையை இழந்த பிரபல பிரிட்டிஷ் பாடகர் எல்டன் ஜான் (Videos)

பிரபல பிரிட்டிஷ் பாடகர் எல்டன் ஜான் (Elton John) கிருமித் தொற்றின் காரணமாக இவ்வாண்டின் முற்பாதியில் தமது பார்வையை இழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

77 வயது ஜான் அந்தத் தகவலை நேற்று முன்தினம் (1 டிசம்பர்) லண்டனில் நடத்தப்பட்ட அரங்க நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

“எனக்குச் சிக்கல்கள் இருந்ததை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள். எனது பார்வையை இழந்துவிட்டேன். என்னால் நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடியவில்லை ஆனால் அதனை ரசித்தேன்,” என்றார் ஜான்.

ஜான் கடந்த சுமார் 60 ஆண்டுகளாக இசைத்துறையில் இருந்திருக்கிறார்.

அவர் இதுவரை 300 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தொகுப்புகளை விற்றுள்ளார்.

மறைந்த டயானாவின் மரண நிகழ்வில் குட் பை பாடலோடு எல்டன்

 

எனது பார்வையை இழந்துவிட்டேன் என தெரிவித்த எல்டன்

 

Leave A Reply

Your email address will not be published.