மென்டிஸ் அன்ட் கம்பெனியின் மதுபான உற்பத்தி உரிமத்தை இன்று (05) முதல் இடைநிறுத்த உத்தரவு!
இன்று (05) முதல் டபிள்யூ.எம்.மென்டிஸ் அன்ட் கம்பெனியின் மதுபான உரிமத்தை இடைநிறுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
கலால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 5.7 பில்லியன் ரூபா மாதாந்த 3% மேலதிக வரி மற்றும் 3% வரியை நிறுவனம் செலுத்த தவறியமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், மதுபான உற்பத்தி செயல்முறையை 05.12.2024 முதல் இடைநிறுத்தவும், மேலும் நிலுவைத் தொகை மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து கலால் உரிமங்களும் டிசம்பர் (31) க்கு மேல் நீட்டிக்கப்படாது என்றும் கலால் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
கலால் கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கலால் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.