யூன் சுக் இயோல் அதிபர் பொறுப்பிலிருந்து விலகவேண்டும்: தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்.
யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அதிபர் பொறுப்பிலிருந்து விலகுமாறு கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
நடத்துகின்றனர்.
அவர்கள் கையில் பதாகைகளைப் பிடித்துக்கொண்டு தென்கொரியாவின் சோலில் அமைந்துள்ள அதிபர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக CNA செய்தித்தளம் தெரிவித்தது.
யூன் சுக் இயோல் அவரையும் அவரது மனைவியையும் பாதுகாக்கும் நோக்கத்தில் ராணுவ ஆட்சியை அறிவித்ததாக ஒருவர் கூறினார்.
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) நேற்றிரவு (3 நவம்பர்) திடீரென ராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தார்.
பின்னர் அதனை மீட்டுக்கொள்வதாக அவரே தெரிவித்திருந்தார்.