அமெரிக்க காப்புறுதி நிறுவனத் தலைவர் சுட்டுக் கொலை – கொலையாளி பற்றிப் புதிய தகவல்கள்

அமெரிக்காவில் UnitedHealthcare காப்புறுதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரயன் தாம்சன் (Brian Thompson) சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாகக் கூடுதல் விவரங்கள் வெளிவந்துள்ளன.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அட்லாண்டாவில் இருந்து நியூயார்க் நகரத்துக்குப் பேருந்தில் வந்திருக்கிறார்.

சந்தேக நபரின் புதிய புகைப்படத்தை நியூயார்க் காவல்துறை வெளியிட்டது.

தாக்குதல் நடத்தியவர் பயிற்சிபெற்ற துப்பாக்கிக்காரர் என்று புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.

திரு பிரயன் தாம்சன் Midtown Manhattan ஓட்டல் வெளியே புதன்கிழமை காலை நேரத்தில் பின்பக்கம் இருந்து சுடப்பட்டார்.

கொலைக்கான நோக்கம் தெரியவில்லை.

Leave A Reply

Your email address will not be published.