“பதவி விலகமாட்டேன்” – பிரஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன்
பிரஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron),
பதவி விலகச் சொல்லி விடுக்கப்படும் அறைகூவலை நிராகரித்திருக்கிறார்.
பிரஞ்சு அரசாங்கம் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் கவிழ்ந்த சில மணிநேரத்தில் அதிபரும் விலகவேண்டும் என்ற கோரிக்கை வந்தது.
பிரான்ஸ் மோசமான அரசியல் நெருக்கடியைச் சந்திக்கிறது.
நாடாளுமன்றம் பிரிந்து கிடக்கிறது. எதிர்காலம் குறித்த எந்தத் தெளிவும் இல்லை. அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டமும் வளரும் நிதிப்பற்றாக்குறையும் எப்படி கையாளப்படும் என்பது தெரியவில்லை.
அதிபர் மக்ரோன் மற்றவரின் பொறுப்பற்ற செயலுக்குப் பொறுப்பேற்க முடியாது என்றார்.
கிறிஸ்துமஸுக்கு ஒருசில நாள் இருக்கும்போது அரசாங்கத்தை இறக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் சொன்னார்.
பதவியில் தொடரப் போவதாகவும் அடுத்த ஒருசில நாளில் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என்றும் பிரஞ்சு அதிபர் அறிவித்தார்.