அரசியலமைப்பு குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிறீதரன் வெற்றி.
இன்று காலை பாராளுமன்றில், அரசியலமைப்பு குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிறீதரன் எம்பி வெற்றி பெற்றுள்ளார்.
25 உறுப்பினர்களில் ஒருவரை அரசியலமைப்பு குழுவிற்கு நியமிப்பதற்காக கேட்கப்பட்டது, அப்போது சிறீதரன் எம்பியை தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமாரும் வழிமொழிந்து முன்மொழிந்தார்கள்.
கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களை நாமல் நாஜபக்சவும், ரவி கருணாநாயக்கவும் வழிமொழிந்து முன்மொழிந்தார்கள். பின்னர் நடந்த வாக்கெடுப்பில் நால்வர் வாக்களிக்காமல் விலக, 21 வாக்குகளில் 11 வாக்குகளை சிறீதரன் எம்பியும், 10 வாக்குகளை கௌரவ ஜீவன் தொண்டமானும் பெற்றனர். 1 வாக்கு வித்தியாசத்தில் சிறீதரன் எம்பி அரசியலமைப்பு குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.
2010 பாராளுமன்ற தேர்தல் – 10,057 வாக்குகள்
2015 பாராளுமன்ற தேர்தல் – 72,258 வாக்குகள்
2020 பாராளுமன்ற தேர்தல் – 35,825 வாக்குகள்
2024 பாராளுமன்ற தேர்தல் – 32,833 வாக்குகள்
2011 உள்ளூராட்சி தேர்தல் – கிளிநொச்சியின் அனைத்து பிரதேச சபைகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்கள்.
2018 உள்ளூராட்சி தேர்தல் – கிளிநொச்சியின் அனைத்து பிரதேச சபைகளையும் வென்று ஆட்சி அமைத்தார்கள்
2013 மாகாணசபை தேர்தல் – சிறீ சேர் இறக்கிய 3 வேட்பாளர்களும் சம வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்கள்.
2023 தமிழரசுக்கட்சி தலைவர் போட்டி – சிறீதரன் எம்பிக்கும் மதிப்பிற்குரிய சுமந்திரன் அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற தலைவர் தெரிவிற்கான போட்டியில் சிறீதரன் சேர் 184 வாக்குகளையும் சுமந்திரன் அவர்கள் 134 வாக்குகளையும் பெற்றனர். 50 வாக்குகள் வித்தியாசத்தில் சிறீதரன் எப்ப வெற்றி பெற்று தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
2024 அரசிலமைப்பு குழு உறுப்பினர் தெரிவு – எதிர்க்கட்சி 25 பேரில் ஒருவர் அரசியலமைப்பிற்கு தெரிவு செய்யப்படவேண்டும் என்ற நிலையில் சிறீதரன் எம்பியும் ஜீவன் தொண்டமான் எம்பியும் போட்டியிட்டனர். அதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிறீதரன் எப்ப வெற்றிபெற்று அரசியலமைப்பு குழுவிற்கு முதல் தமிழ் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.