சிரியா நகரிலிருந்து வெளியேறும் மக்கள்.

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸிலிருந்து பல்லாயிரம் பேர் வெளியேறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கிளர்ச்சிக் குழு நகரை நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. கிளர்ச்சிக் குழு அதைப் பிடித்துவிட்டால் தலைநகர் டமாஸ்கஸுடன் தொடர்பைத் துண்டிக்க அது வழிவிடும். அலெப்போ நகரின் கட்டுப்பாடு சென்ற வாரம் கிளர்ச்சியாளர்களின் கைக்குப் போனது.

நேற்று (5 டிசம்பர்) வடக்கே உள்ள ஹாமா அவர்களின் வசம் சென்றது. அதிபர் பஷார் அல்-அசாதுக்குக் (Bashar al-Assad) கிளர்ச்சியாளர்களின் அதிவேக முன்னேற்றம் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அவரை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதே கிளர்ச்சியாளர்களின் நோக்கம். சிரியாவில் 2011ஆம் ஆண்டிலிருந்தே உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.