தினமும் மாறும் அரிசி விலை : நுகர்வோர்கள் விசனம்
நாளுக்கு நாள் கடைகளில் அரிசி விலையை உயர்த்தும் போக்கு காணப்படுவதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
பழுப்பு அரிசியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பழுப்பு அரிசி தட்டுப்பாடுதான் இதற்கு காரணம்.
சில கடைகளில் 01 கிலோ பழுப்பு அரிசியின் விலை 240 ரூபாவாக உள்ளது. சில கடைகளில் 01 கிலோ குத்தரிசியின் விலை 210 ரூபாவாக உள்ளது.
இதன்மூலம், பல்வேறு விலைக்கு அரிசி விற்பனை செய்வதால், நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பொறுப்பு வாய்ந்த துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என நுகர்வோர்கள் கூறுகின்றனர்.