நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்: வருண்குமார் ஐ.பி.எஸ்
சண்டிகர் நகரில் 5வது தேசிய ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய உள்துறை அமைச்சின் அழைப்பின் பேரில், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ். இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.
அப்போது இணையத்தளக் குற்றங்களைக் கண்காணிப்பது, தடுப்பது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஐ.பி.எஸ். ஆதாரங்களோடு விளக்கிப் பேசினார்.
அவர் பேசியபோது, “இணையக் குற்றங்களால் ஓர் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள தானும் தன்னுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டதாகவும் அதற்குக் காரணம் நாம் தமிழர் கட்சிதான். நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம்,” என்று கூறினார்.