டொனால்ட் லு சஜித்தை சந்தித்தார்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu ) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வேளையிலையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்தார்.
இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையில் தற்போதுள்ள கூட்டாண்மையை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு, தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் டொனால்ட் லூவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.