தென்னாப்பிரிக்கா அணி, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 348 ஓட்டங்கள் நிர்ணயம்.

ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெறும் இலங்கையுடான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியானது 317 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபடியாக அணித் தலைவர் டெம்பா பவுமா 66 ஓட்டங்கள‍ையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 47 ஓட்டங்களையும் மற்றும் ஐடன் மார்க்ராம் 55 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அதிகபடியாக பிரபாத் ஜெயசூரிய 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 358 ஓட்டங்களை பெற்றது.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்கள‍ை பெற்றது.

இதனால், 30 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினம் 86 ஓவர்களை எதிர்கொண்டு 317 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 348 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.