திருமணத்திற்கு வயது ஒரு தடையல்ல : 100 வயதுப் புதுமணத் தம்பதி.

இரு மனம் சேரும் திருமணத்திற்கு வயது ஒரு தடையல்ல என்பதை அமெரிக்காவின் பிலடெல்பியாவைச் (Philadelphia) சேர்ந்த புதுமணத் தம்பதி நிரூபித்துள்ளனர்.

100 வயது பெர்னியும் (Bernie) 102 வயது மார்ஜரியும் (Marjorie) ஆக வயதான புதுமணத் தம்பதிக்கான சாதனையைப் படைத்து கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு அந்தத் தகவலை வெளியிட்டது.

பெர்னியும் மார்ஜரியும் இளம் வயதில் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

இருவரும் வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்துகொண்டனர்.

இருவரும் தங்களது வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள்.

எதிர்பாரா விதமாக அவர்கள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் சந்தித்தனர். அவர்களது நட்பு காதலாக மலர்ந்தது.

இருவரும் இவ்வாண்டு (2024) மே 19ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை இவர்களின் காதல் கதை உணர்த்துகிறது…

Leave A Reply

Your email address will not be published.