சிரிய அதிபர் ரஷ்யாவில் அடைக்கலம்.
சிரிய அதிபர் பஷார் அல்-அசாதுக்கு (Bashar al-Assad) அடைக்கலம் வழங்கியிருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
தலைநகர் டமாஸ்கஸிலிருந்து தப்பிச் சென்ற அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆதரிப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியது.
அசாதின் ஆட்சியின்போது சிரியாவின் முக்கிய நட்பு நாடாக ரஷ்யா இருந்தது.
நேற்று (8 டிசம்பர்) ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham) என்ற கிளர்ச்சிக் குழு அதிபர் அசாதின் ஆட்சியைக் கவிழ்த்ததை அடுத்து அவர் நாட்டைவிட்டு வெளியேறினார்.
அசாதின் ஆட்சி முடிவுக்கு வந்ததை மக்கள் பெரிய அளவில் சாலைகளில் கொண்டாடினர்.