கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கார் மோதி பெண் ஒருவர் பலி
புத்தளம் போலவத்தை சந்தியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாகனம் மோதியதில் பெண் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (08) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினரும் ஜீப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புத்தளம் – கொழும்பு வீதியில் வந்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் இறந்தார்.
விபத்து தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் காரின் சாரதி வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.