சீன கடற்படை மருத்துவமனைக் கப்பல் (21 -12) முதல் 28 வரை கொழும்பில்.
இம்மாதம் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சீன மக்கள் கடற்படையின் (அமைதிக் கப்பல்) மருத்துவமனைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளதாகவும், நிபுணர்கள் தலைமையிலான சுகாதாரக் குழுவொன்று வருகை தரவிருப்பதாகவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷான்ஹொங் தெரிவித்தார். அப்போது இலங்கையில் உள்ள அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு மிகவும் வலுவானது என்றும், சுகாதாரத் துறைக்கு மாத்திரமன்றி நாட்டின் அனைத்துத் துறைகளுக்கும் சீன அரசாங்கத்தின் ஆதரவு வழங்கப்படுவதாகவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong வலியுறுத்தினார். இந்த ஆதரவு எதிர்காலத்திலும் தொடரும் என்றார் அவர்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zenhong ஆகியோருக்கு இடையில் நேற்று (09) இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.