மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா? மக்கள் கருத்துகளை அறிய முனைகிறது அரசு.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல்.சந்திரலால் அவர்களின் ஆய்வுகள் மற்றும் மக்களின் கருத்துக்களைப் பயன்படுத்தி மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணையை முன்வைத்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பொதுமக்களின் கருத்துக்களைப் பெறத் தொடங்குவேன் என்று தலைவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (06) இலங்கை மின்சார சபை, அடுத்த வருடத்தின் முதல் 6 மாதங்களுக்கு தற்போதுள்ள மின்சார கட்டணத்தையே பேண உத்தேசித்துள்ள நிலையில் , மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது.