மலேசியாவில் குடி நுழைவுக் குற்றங்களில் ஈடுபட்ட 27000 வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற வாய்ப்பு
மலேசியாவில் குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த சுமார் 27,000 வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் அரசாங்கத்திடம் குறிப்பட்ட அபராதத்தை மட்டும் கட்டினால் போதும்.
இவ்வாண்டு மார்ச் முதல் தேதி தொடங்கிய திட்டம் இம்மாத இறுதியில் நிறைவடைகிறது.
திட்டத்தின் மூலம் நாடு திரும்ப விரும்பி விண்ணப்பம் செய்தோர் மொத்தம் 13 மில்லியன் ரிங்கிட்டுக்கும் (சுமார் 4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மேல் அபராதம் செலுத்தியுள்ளனர்.
அன்றாடம் 350க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்ப்பதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
திட்டத்தின் கீழ் நாடு திரும்ப விரும்புவோர் 300 முதல் 500 ரிங்கிட் வரை அபராதம் செலுத்தவேண்டும்.
மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டித் தங்குவது அல்லது விசா அனுமதி நிபந்தனைகளை மீறியது ஆகியவை குடிநுழைவுக் குற்றங்களில் அடங்கும்.