இறந்த பெண் மீண்டும் உயிர்பெற்ற அதிசயம்
ஸ்பெயினில் இறந்ததாக நம்பப்பட்ட ஒரு பெண்ணுக்கு அவருடைய இறுதிச் சடங்கின் போது உயிர் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில்,அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (6 டிசம்பர்) நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகம் Diario de Pontevedra தெரிவித்துள்ளது.
Son Valenti இறுதிச் சடங்கு இல்லத்தில் பெண்ணின் உடலைத் தயார் செய்துகொண்டிருந்தபோது அவரது விரல்கள் அசைவதை ஊழியர்கள் கவனித்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவ அதிகாரிகளை அழைத்த போது
அங்கு வந்த மருத்துவ அதிகாரிகளால் அப்பெண் இன்னும் உயிருடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
catalepsy எனும் நரம்பியல் கோளாற்றின் அறிகுறி இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுவதாக The Mirror தெரிவித்தது.