03. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகத் தெரிந்த இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்! : வெற்றிச் செல்வன்

பகுதி 03

நான் டெல்லி போவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டு வந்த வேலை என்னோடு தமிழ் மன்னனும், எமது தமிழீழ விடுதலை அணி தலைவர் ஈழவேந்தன் உம் கூட வருவதாக மாறன் கூறி மூவருக்கும் சென்னையிலிருந்து டெல்லி போகும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை தந்தார் காலையில் ஏழு மணிக்கு புறப்பட்ட ரயிலில் நாங்கள் மூவரும் போனோம்.

ரயிலில் ஈழ வேந்தனுக்கு ம் தமிழ் மன்னனுக்கும் சரியான சண்டை. அமெரிக்காவில் வருடாவருடம் டாக்டர் பஞ்சாட்சரம் தலைமையில் தமிழ் ஈழ விடுதலை மாநாடுநடத்துவார்கள். மாநாட்டின் முடிவில் அடுத்த பொங்கலுக்கு அல்லது தீபாவளிக்கு அல்லது புதுவருஷத்துக்கு தமிழீழம் கிடைக்கும் என்று கூறி மாநாட்டை முடிப்பார்கள்.  இந்த மாநாட்டுக்கு இலங்கை தமிழருக்கு சம்பந்தமில்லாத பெரிய அரசியல் வாதிகளை கூப்பிட்டு கௌரவிப்பார்கள் .

இதற்குத்தான் தமிழ் மன்னன் உண்மையில் இலங்கை போராளிகளோடு சேர்ந்து நாங்கள்தான் உழைக்கிறோம் எங்களையெல்லாம் கூப்பிடக் கூடாதா. நாங்களெல்லாம் அமெரிக்கா பார்க்க கூடாதா என ஈழவேந்தனிடம் சண்டை பிடித்தார். தமிழ் மன்னன் தூசண வார்த்தைகளால் ஏசினர் ஈழவேந்தன் கூனிக் குறுகிப் போனார்.

அடுத்தநாள் மாலை ஐந்து மணி போல் எமது ரயில் புதுடெல்லியைச் சென்றடைந்தது. தமிழ் மன்னன் புதுடில்லி நோர்த்அவென்யூ என்ற இடத்தில் இந்திய பாராளுமன்ற எம்பிக்கள் கார் விடஒதுக்கப்பட்ட இடத்தில் உணவகம் நடத்தி வரும் நாராயணன் என்பவரோடு தங்குவதற்கு போன போது என்னையும் தன்னுடன் வரும்படி கூறினார்.

.ஆனால் ஈழவேந்தன் வை .கோபால்சாமி எம் பியை தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவருக்குரிய எம்பி குவாட்டர்சில் தங்கலாம் என என்னையும் அழைத்துக்கொண்டு வை .கோபால்சாமி வீட்டுக்கு போனார். அங்கு நமக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வைகோ எம்பி நாங்கள் வந்த நோக்கம் என்ன என்று கேட்டார். ஈழவேந்தன் என்னைஅறிமுகப்படுத்திவிட்டு, நான் டெல்லி வந்த நோக்கத்தையும் கூறி மூன்று நாள் அங்கு தங்குவதற்கு அனுமதி கேட்டார். உடன் கோபமடைந்த வைகோ எங்களை உடனடியாக வேறு இடம் பார்க்கச் சொன்னார் .கடுமையான குளிர் நேரம் இருட்டி விட்டது ஈழவேந்தன் கெஞ்சிக் கூத்தாடி இரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி கேட்டு வெற்றிபெற்றார் .

அடுத்த நாள் காலையில்தான் எழும்பும்போது நாங்கள் அங்கு இருக்க கூடாது என்றும் கூறினார். வைகோ அண்ணாவின் கோபத்துக்குக் காரணம் அவரும் அமெரிக்க மாநாட்டுக்கு தனக்கு ஏன் அழைப்பு இல்லை தேவையற்ற நபர்களுக்கு எல்லாம்அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள்.

உதவி என்றால் மட்டும் என்னிடம் வந்து விடுங்கள் என்று கூறினார். ஈழவேந்தன் தனக்கும் அமெரிக்க மாநாட்டு காரர்களுக்கும் சம்பந்தம் இல்லை., என விளங்கப் படுத்தியும் வைகோசமாதானம் அடையவில்லை. பிற்காலத்தில் வைகோ அண்ணா எனக்கு மிக நெருங்கிய வராக இருந்தது பிற்கால கதை.

அடுத்த நாள் காலையிலேயே நாங்கள் எழும்பி வைகோவின் நண்பரும் உதவியாளரும் மான ஜார்ஜ்இடம் சொல்லி விட்டு வெளியில் வந்து ஈழவேந்தன் தனக்குத் தெரிந்த காந்தி பீஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பின் தங்கும் இடத்துக்கு சென்றார்.

நான் புத்தக கட்டுகளுடன் தமிழ் மன்னனை தேடிச் சென்றேன். என்னை பார்த்த தமிழ் மன்னனும் அவரின் நண்பர் நாராயணனும் கட்டிப்பிடித்து தம்பி நாங்கள் இருக்கிறோம் உனக்கு உதவி செய்ய ,தெரியாத இடம் என்று பயப்படாதே என்று கூறி,உடனடியாக காலைக்கடன்களை முடித்து குளிக்க நாராயணன் பொதுக்  குளியலறைகழிவறைக்கு அழைத்து சென்று உதவி செய்தார்.

சுடச்சுட காலை உணவு தந்தார். தான் வறுமையில் இருந்தாலும், அவர் செய்த உதவிகள் மறக்க முடியாதவை பிற்காலத்தில் குடித்து குடித்து இறந்து விட்டார்.

உடனடியாக நானும் தமிழ் மன்னனும் டெல்லி தொலைபேசி புத்தகத்தை எடுத்து டெல்லியில் இருந்து அனைத்து எம்பஸ்ஸி தூதர் வெளிநாட்டு தூதரகங்களுக்கு விலாசம் எடுத்து இலங்கை அரசுக்கு எதிரான நான் கொண்டு வந்த புத்தகங்களை பார்சல் செய்து தபாலில் போட்டேன். அதே மாதிரி அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பினோம்.

அன்று மாலை விமானத்தில் வந்த பத்திரிகையாளர் ஹரி டெல்லி பிரஸ் கிளப்பில் ஒரு மீட்டிங் நிறுத்தினார் அங்கும் புத்தகங்களைக் கொடுத்து ,அக்காலகட்டத்தில் இலங்கை பிரச்சனை பெரிதாக அதிகம் பேருக்குதெரியவில்லை நாங்கள் முதன்முறையாக டெல்லி பத்திரிகையாளர்களுக்கு இலங்கையில்இருக்கும் பிரச்சனைகளை விளங்கபடுத்தினோம்.

இதே நேரம் என்னிடம் பல புத்தகங்களை வாங்கிச் சென்ற ஈழவேந்தன் புத்தகங்களில் தனது தமிழீழ விடுதலை அணி என்ற விசிட்டிங் கார்டை வைத்து பத்திரிகை அலுவலகங்களில் கொடுத்துச் சென்றுள்ளார்.

அடுத்த நாள் பத்திரிகைகளில் தமிழீழ விடுதலையை அணித்தலைவர் ஈழவேந்தன் இலங்கை அரசுக்கு எதிராக பிரசுரங்கள் விநியோகித்து உள்ளதாக போட்டார்கள். இதனால் மூன்று மாத விசாவில் இந்தியா வந்த ஈழவேந்தன் திரும்ப இலங்கை போகமுடியாமல் இந்தியாவில் தலைமறைவாகி விட்டது அது ஒரு செய்தி.

எமது வேலைகளை முடித்துவிட்டு நானும் தமிழ் மன்னனும் ரயிலில்சென்னை நோக்கி பயணமானோம்.

சென்னையில் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

தொடரும் …..


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.