புதிய கடற்றொழில் அமைச்சரின் உத்தரவால் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னைய திட்டம் நிறுத்தம்!

வடக்கடலில் இந்திய மீனவர்கள் பணம் செலுத்தி மீன்களை கொல்லலாம் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் வகுத்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்துடனும் கடற்றொழில் திணைக்களத்துடனும் முன்னதாக கலந்துரையாடி இந்திய மீனவர்களுக்கு வடகடலில் மீன்பிடிக்கும் வாய்ப்பையும் வழங்குவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருந்தார் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (10) தெரிவித்தார்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்திய-இலங்கை கடற்றொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது எனவும், இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் நேரடியான கலந்துரையாடல் மூலம் மிகவும் சுமுகமான முறையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இதற்கு மாற்றாக அமையும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் அதிகளவில் வடகடலுக்கு அத்துமீறி வரும் இவ்வேளையில் இந்திய மீனவர்கள் வடகடலுக்கு வருவதற்கு ஏதேனும் அனுமதி வழங்கினால் அது பெரும் அச்சுறுத்தலாக மாறுவதுடன் தீர்க்க முடியாத பிரச்சினையாகவும் மாறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை வடகடலுக்குள் பலவந்தமாக வரும் இந்திய மீனவர்களை கைது செய்வதை கடற்படை நிறுத்தாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள கடற்றொழிலாளர் சங்கங்களுடன் உரையாடிய அமைச்சர் ஊடகங்களிடம் இந்தக் கருத்துக்களையும் வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.