கடன் கோரிக்கையை நிராகரித்து , கொழும்பு துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் தலையில் குட்டிய அதானி!
இந்தியாவின் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன்ஸ் பிரைவேட் லிமிடெட், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டத்திற்காக அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதியத்திடம் (IDFC) 553 மில்லியன் டாலர் கடன் கோரிக்கையை திரும்பப் பெற்றுள்ளது.
அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிய கடனுக்கு பதிலாக, அதானி நிறுவனத்தின் உள் நிதியை வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கௌதம் அதானி மீது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் திணைக்களம் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருப்பதால் அதானி குழுமம் இந்த முடிவை எடுத்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் மேற்கு முனையத் திட்டம் சிறப்பாக முன்னேறி வருவதாகவும், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தில் அதானி குழுமம் 51% பங்குகளை வைத்துள்ளது, இது சீனா மெர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் கோ லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது.
இலங்கையின் கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், முனையத்தின் 34% பங்குகளை வைத்துள்ளதுடன், எஞ்சிய பகுதிகளை இலங்கை துறைமுக அதிகாரசபை கொண்டுள்ளது.