சிரியாவில் தற்காலிக பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரியாவில் பஷர் அல் அசாத் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து தற்காலிக பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரிய அரசை கவிழ்த்த ஆயுதக் குழுவின் தலைவரான அபு முகமது அல் ஜோலானி பிரதமராக வருவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், சிரியாவின் புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவே தற்காலிக பிரதமரை நியமிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொஹமட் அல் பஷீர் என்ற பொறியியலாளர் அடுத்த வருடம் மார்ச் 1 ஆம் திகதி வரை தற்காலிகப் பிரதமர் பதவியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.