ஆப்கானிஸ்தான் அமைச்சர் ஒருவர் தற்கொலை குண்டு தாக்குதலில் பலி.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் அகதிகள் விவகார அமைச்சர் கலீல் ஹக்கானி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் தலிபான் அரசின் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியின் உறவினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்தினராக மாறுவேடமிட்டு அமைச்சுக் கட்டிடத்திற்குள் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி, அமைச்சர் கடிதமொன்றில் கையொப்பமிட்டுக் கொண்டிருந்த போது வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கு உயர்மட்ட அளவில் கொலைகள் நடப்பது இதுவே முதல் முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.