திரிபுராவில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு ரிலையன்ஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு ரிலையன்ஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விரைவில் ரிலையன்ஸ் குழு அங்கு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இந்த தகவலை திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். குமுலுங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மாணிக் சாஹா கூறுகையில், முதலீட்டு வாய்ப்புகளை ஆராய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழு விரைவில் திரிபுரா செல்கிறது.

மேலும் பாரதிய ஜனதா கட்சி ஜன்ஜாதி பிரிவு மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அரசியல் மேம்பாட்டிற்காகவும் பாடுபடுகிறது. தற்போதைய அmரசு மாநிலத்தின் ஒற்றுமை, மற்றும் வளர்ச்சியைப் பாதுகாக்க சிறப்பு முன்னுரிமையுடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும், சமீபத்தில் நான் மும்பை சென்று ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியை சந்தித்தேன். அவரை திரிபுராவுக்கு வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன். ஏனெனில் நமது மாநிலம் சுற்றுலாத் தொழில் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில் உள்ளிட்ட பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் அவருடன் கலந்துரையாடினேன்.

Leave A Reply

Your email address will not be published.