“சித்திரவதை செய்தோர் தண்டிக்கப்படுவர்” – சிரியாவின் கிளர்ச்சித் தலைவர் அபு முகமது அல்-ஜுலானி
சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அபு முகமது அல்-ஜுலானி (Abu Mohammed Al-Julani) நாட்டின் அதிபர் பஷார் அல்-அசாதுக்கு (Bashar al-Assad) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டோரைச் சித்திரவதை செய்தவர்களும், கொலை செய்தவர்களும் தேடித் தண்டிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.
அவர்கள் சிரியாவில் இருந்தாலும் சரி , வெளிநாட்டில் இருந்தாலும் சரி அவர்கள் நிச்சயமாக அடையாளம் காணப்படுவர் என்று அபு முகமது அல்-ஜுலானி கூறினார்.
தவறு செய்தோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருந்தால் அவர்களைத் திரும்ப ஒப்படைக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.