பிரிட்டன் சாலையில் சிகரெட் துண்டை வீசிய ஆடவருக்கு – $1,400 அபராதம்

பிரிட்டனில் சிகரெட் துண்டைச் சாலையில் வீசிய ஆடவருக்குச் சுமார் 800 பவுண்ட் (1,400 டொலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மே 23 ஆம் தேதி கார்ல் ஸ்மித் (Carl Smith) புரோம்லி நகரில் சிகரெட் துண்டைச் சாலையில் வீசினார்.

அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்த ஆண்டு செப்டம்பர் முதல் புரோம்லியில் குப்பை போட்டதற்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 12ஆவது வழக்கு இது.

குற்றவாளிகள் மொத்தம் 6,000 பவுண்டுக்கும் அதிகமாக அபராதம் செலுத்தியுள்ளனர் என்றது BBC.

குப்பை போடுவது பெரும் பிரச்சினையாக இருப்பதாக புரோம்லி நகர மன்றத்தின் நிர்வாகக் கவுன்சிலர் கூறினார்.

தெருக்களைச் சுத்தம் செய்வதற்கான செலவு பல மில்லியனை எட்டிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.