கணினி ஊடுருவி பற்றிய தகவல் தந்தால் US$10 மில்லியன் ரொக்கம்

சீனாவில் ஒரு கணினி மென்பொருள் ஊடுருவி இருக்கிறார்.

அவர் பெயர் குவான் தியன்பெங். வயது 30. அவர் சீனாவின் சீச்சுவான் (Sichuan) மாநிலத்தில் இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.

அந்த நபரைக் கண்டுபிடிக்க விவரங்களை வழங்குபவருக்கு 10 மில்லியன் டாலர் சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

குவான் பணிபுரியும் Silence Information Technology நிறுவனம் மீது அமெரிக்கக் கருவூலப் பிரிவு தடைகளை விதித்துள்ளது.

குவானும் அவருடன் சேர்ந்து குற்றம் புரிந்ததாக நம்பப்படும் மற்றவர்களும் பிரிட்டனில் அமைந்துள்ள Sophos கணினிப் பாதுகாப்பு நிறுவனம் விற்பனை செய்த firewalls மென்பொருளில் இருந்த கோளாறுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகெங்கும் 81,000 firewall ஒரே நேரத்தில் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அவற்றில் 23,000 அமெரிக்காவில் பாதிக்கப்பட்டது.

ஊடுருவிகளை அமெரிக்கா வலைவீசித் தேடி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.