வடக்கு மக்களே! அவதானமாயிருங்கள்!
வட மாகாணத்தில் நேற்று (11-12-2024) மாலை வரை 7 பேரைப் பலிகொண்டது எலிக்காய்ச்சல் தான் என இரத்த மாதிரிப் பரிசோதனை முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்கள், வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெப்டோஸ்பைரோசிஸ் (எலிக்காய்ச்சல்) என்பது ஒரு பாக்டீரியாவினால்ஏற்படும் நோயாகும், இது சூறாவளி அல்லது வெள்ளத்திற்குப் பிறகு மக்கள்அசுத்தமான நீரில் நடந்து திரியும் போது அல்லது, அதை குடிக்கவோ குளிக்கவோ,பயன்படுத்தும் போது பரவுகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வடக்கு மக்களே மிக அவதானமாக இருங்கள்.
1. சுத்தமான கொதித்து ஆறிய நீரை பருகவும்.
2. குளம் குட்டைகளில் குளிக்க, வேண்டாம்.
3. குளம் குட்டைகளில் இருந்து நீரை அருந்த, வாய் கொப்பளிக்க வேண்டாம்.
4. கால்களில் செருப்பு அல்லது சப்பாத்துடன் நிலத்தில்/ சேற்று நிலத்தில்இறங்கவும்.
5. இயலுமானவரை வெள்ளத்தில் இறங்க வேண்டாம்.