மன்னார் தேசிய இளைஞர் படையணியின் மாபெரும் இரத்த தான முகாம். (Video)

மன்னார்,இரண்டாம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி முகாமில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்று இன்றைய தினம் (12.12), வியாழக்கிழமை இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான, நிறுவனத்தின் (MSEDO) அனுசரணையுடன் இடம் பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வினை,மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன்  ஆரம்பித்து வைத்தார்.

காலை 8:30 மணியில் இருந்து மாலை மூன்று மணி வரை நடைபெற்ற இந்த இரத்த  தான முகாமிலே, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு குருதிக்  கொடையளித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த,மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன்,

“மன்னார் தேசிய இளைஞர் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த   இந்த குருதிக் கொடை நிகழ்வானது மிகவும் அத்தியாவசியமானது. இதன் மூலம் பல உயிர்கள் காக்கப்படும்,

இந்த இரத்தக் கொடையாளிகள் ஒரு சமூகப் பணியினை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் இந்த இரத்த தான முகாமினை ஏற்பாடு செய்த மன்னார் தேசிய இளைஞர் படையணியின் பொறுப்பதிகாரிக்கும், மற்றும் இதற்கு அனுசரணை வழங்கியிருக்கும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் “என்றார்.

Leave A Reply

Your email address will not be published.