உலகின் ஆக இளம் சதுரங்க வெற்றியாளரானார் குகேஷ் டொம்மராஜு

உலகச் சதுரங்க விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் 18 வயது குகேஷ் டோம்மராஜூ (Gukesh Dommaraju) வெற்றிபெற்றுள்ளார்.

அவருக்கு 2.5 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அவர் சீனாவின் 32 வயது டிங் லிரனை (Ding Liren) . தோற்கடித்து உலகின் ஆக இளம் சதுரங்க வெற்றியாளராக வந்த குகேஷ் டொம்மராஜுக்கு உலகச் சதுரங்கப் போட்டியில் வென்ற ஆக இளையர் என்ற பெருமை குகேஷைச் சேரும்.

1985ஆம் ஆண்டிலிருந்து உலகப் புகழ்பெற்ற சதுரங்க வீரர் கேரி காஸ்பரோவுக்கே (Garry Kasparov) ஆக இளையர் என்ற பெருமை இருந்தது.

அவர் வெற்றிபெற்றபோது அவருக்கு வயது 22.

உலகச் சதுரங்கப் போட்டியின் இறுதிச்சுற்று Resorts World Sentosaவில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.