ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடமையினை பொறுப்பேற்ற இராமலிங்கம் சந்திரசேகர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13.12.2024) காலை 08.45 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணாநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உடனிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.