Friday of Victory சிரியாவில் கொண்டாட்டம்.
சிரியா மக்கள் அசாத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு முதல் வெள்ளிக்கிழமைத் தொழுகையை அனுசரித்துள்ளனர்.
Friday of Victory என்றழைக்கப்பட்ட நாளை ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் டமாஸ்கஸில் வாணவேடிக்கையுடன் கொண்டாடினர்.
ஹோம்ஸ் (Homs), ஹமா (Hama), இட்லிப் (Idlib)ஆகிய நகரங்களிலும் மக்களின் ஆரவாரம் எதிரொலித்தது.
அரபு, துருக்கிய நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்த மத்திய கிழக்கிற்கு அமெரிக்காவின் உயர் அரசதந்திரி சென்றுள்ளார்.
அது சிரியாவின் அரசியல் மாற்றத்துக்குக் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சிரியாவில் மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்கான அவசியம் இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கனும் (Antony Blinken) துருக்கியேவின் வெளியுறவு அமைச்சரும் ஒப்புக்கொண்டனர்.
கத்தார் அதன் முதல் அரசியல் தூதரை நாளை சிரியாவுக்கு அனுப்பவிருக்கிறது.
அவர் நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்வதைத் துரிதப்படுத்துவது பற்றிக் கலந்துரையாடுவார்.
பல மேற்கத்திய நாடுகள் சிரியாவின் புதிய தலைமைத்துவத்தை அணுகுவதில் சவால்களை எதிர்கொள்கின்றனர்.