சதுரங்க வெற்றியாளர் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கிய தமிழக அரசு.
உலகச் சதுரங்கப் போட்டி வெற்றியாளர் குகேஷ் தொம்மராஜுவுக்குத் (Gukesh Dommaraju) தமிழக அரசாங்கம் 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்குகிறது.
உலகின் ஆக இளவயதுச் சதுரங்கப் போட்டி வெற்றியாளராக வாகைசூடிய குகேஷுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்தத் தொகையை அறிவித்தார்.
“உலகின் மிக இளைய வெற்றியாளரான குகேஷின் மகத்தான சாதனையைப் பாராட்டி இந்தப் பரிசுத்தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி. குகேஷின் வெற்றி வரலாற்று வெற்றி. அவர் நாட்டுக்கு மிகப்பெரிய பெருமை தேடித்தந்துள்ளார். வாழ்வில் தொடர்ந்து வெற்றிபெற்று உச்சத்தை அடைய வாழ்த்துகள்!” என்று திரு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் டிசம்பர் 12ஆம் தேதி நடந்த போட்டியில் 18 வயது குகேஷ் சீனாவின் 32 வயது டிங் லிரனை (Ding Liren) வெற்றிகண்டார்.
அவருக்கு 1.35 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.