தவறு என்னுடையது அல்ல, துண்டு பிரசுரங்களை தயாரித்தவர்களது தவறு: பிரதி சபாநாயகர் ரிஸ்வி.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, தான் ஒரு சிறப்பு மருத்துவர் அல்ல எனவும் , கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட பிரசார துண்டு பிரசுரங்களில் விசேட வைத்தியர் என குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அவற்றைப் பார்த்தபோது அவற்றைத் திருத்துமாறும், விநியோகிக்க வேண்டாம் என்றும் அறிவித்ததாகவும், ஆனால் தேர்தல் காலத்தில் எப்படியோ அவை விநியோகிக்கிப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனக்கு முன்கூட்டியே சிலரால் தெரிவிக்கப்பட்டதாகவும், தனது கல்வித் தகுதி குறித்து சமூக வலைதளத்தில் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.