அனைத்துக் கிளர்ச்சிக் குழுக்களும் கலைக்கப்படும் – அகமது அல்-ஷாரா.
சிரியாவில் உள்ள அனைத்துக் கிளர்ச்சிக் குழுக்களும் கலைக்கப்படும் என்று அந்நாட்டின் ஹயாட் தாஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham) குழுத் தலைவர் அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) கூறியுள்ளார்.
டமாஸ்கஸுக்கு எதிரான அனைத்துலகத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அகதிகளாகச் சென்றவர்கள் நாடு திரும்ப அது மிகவும் முக்கியம் என்றார்.
ஹயாட் தாஹ்ரிர் அல்-ஷாம் குழுவைத் தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறியது.
டமாஸ்கஸ் அதிகாரிகளுடன் தனது அதிகாரிகள் பேச்சு நடத்துவர் என்று பிரிட்டிஷ் அரசாங்கமும் தெரிவித்துள்ளது.
சிரியாவில் அஸாதின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய சுமுகமான அரசியல் மாற்றத்தை உறுதிசெய்ய அமெரிக்கா, பிரிட்டன், அரபு நாடுகள் ஆகியன முயல்கின்றன.