‘அநுரா-மோடி’ கூட்டறிக்கையின் சிறப்பை ரணில் போற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் 2024 டிசெம்பர் 16ஆம் திகதி புதுடில்லியில் வெளியிட்ட கூட்டறிக்கை இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஸ்திரப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு தலைவர்களின் கூட்டு அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய அபிவிருத்தி வாய்ப்பு எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
திருகோணமலையை பிராந்திய மின்சக்தி மற்றும் கைத்தொழில் கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்து பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை (YTCA) முன்னெடுத்துச் சென்றமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை பாராட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.