லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஊடக பயிற்சி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள (LHMA) ஊடகத் தொடர்பாடல் (Diploma)கற்கை நெறி ஆரம்பம்!
லேக் ஹவுஸ் ஊடக நிறுவனத்தால், ஊடகத் தொடர்பாடல் , டிப்ளோமா கற்கை நெறி (Mass Media and Communications) புதிதாகத் தமிழ் மொழியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த (15.12),ஞாயிற்றுக்கிழமை காலை, 9.30 மணியளவில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பயிற்சிக் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் செயற்பாட்டுப் பிரிவுப் பணிப்பாளர், சாமர,கற்கை நெறி பயிற்சிகளுக்கான பொதுப் பிரதி முகாமையாளர்,பிரசன்ன யாப்பா, சிரேஷ்ர ஊடகவியலாளர் சமிந்த கமகே,கற்கை நெறியின் தமிழ் மொழிமூல இணைப்பாளரும், சிரேஷ்ர ஊடகவியலாளருமாகிய ஜெயரஞ்சன் யோகராஜ் ,ஆகியோர் கலந்து கொண்டதோடு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்த டிப்ளோமா கற்கை நெறி இலத்திரனியல்,பத்திரிகைத் துறை, மற்றும் சமூக வலைதளங்களில் தேர்ச்சி மிக்க சிரேஷ்ர ஊடகவியலாளர்களால் நடாத்தப்படவுள்ளது.
இப்பயிற்சி நெறியானது, 6 மாதங்கள் விரிவுரைகளும் 2 மாதங்கள் வெளிக்களப் பயிற்சியுமாக 8 மாதங்கள் நடைபெற உள்ளது. இதில் பத்திரிகைத் துறையின் புகைப்படக் கலை, அறிவிப்பு, செய்தி வடிவமைத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் கற்பிக்கப்படவுள்ளது. மேலும் மாணவர்களுக்கான பயிற்சிகள் செயன்முறை மூலம் வழங்கப்படும்.
பயிற்சி நிறைவில் வழங்கப்படும் சான்றிதழ்கள் பல்கலைக்கழக டிப்ளோமா சான்றிதழ்களை விடவும் வலிமையானதென, விரிவுரையாளர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பயிற்சி நெறிக் கட்டணமாக ரூபா, அறுபதாயிரம்(60,000) அறவிடப்படவுள்ளது. இப்பணத்தினை மாணவர்கள் தவணை முறையில் செலுத்த முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நெறியில் இணைய விரும்பும் மாணவர்கள் ரூபா 3000 செலுத்தி இணைந்து கொள்ள முடியும். வரும் ஞாயிறு (22.12)காலை 9.30 மணியளவில் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டு லேக் ஹவுஸ் ஊடக நிறுவனம் சுற்றிக் காண்பிக்கப்படும்.
அதன் பின்னர் குறித்த டிப்ளோமா கற்கை நெறியானது வரும் ஜனவரி மாதம் 2025, பிரதி ஞாயிறு தோறும் காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றிலே அரச ஊடகமொன்று, திமிழ் மொழியிலே ஒரு டிப்ளோமா கற்கை நெறியினை முன்னெடுத்துச் செல்வது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.