இந்தியப் பயணம் முடிந்தது நாடு திரும்பினார் ஜனாதிபதி, அடுத்த பயணம் சீனா, அமெரிக்காவுக்கு
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தைமுடித்துக் கொண்டு நேற்று (17) புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்விமானம் மூலம் இரவு நாடு திரும்பினார்.
கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாகஇந்தியாவுக்குப் புறப்பட்டார்.
அங்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள்பலருடன் கலந்துரையாடினார்.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மற்றும் தொழிலாளர்அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.
இதேவேளை, சீனா மற்றும் அமெரிக்காவுக்கான இரண்டு உத்தியோகபூர்வவிஜயங்களுக்கான அழைப்புகள் ஜனாதிபதிக்கு ஏற்கனவே கிடைத்துள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.