கல்விப் பொது சாதாரணதர பரீட்சை அடுத்த வருடம் மார்ச் ஆரம்பிக்கப்படும் .

கல்விப்பொது சாதாரண தர 2024 (2025) பரீட்சையை மார்ச் 17, 2025 இல் ஆரம்பிக்க இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 17 முதல் 26 வரை நடைபெற உள்ளது.

தேர்வு குறித்து மேலதிக தகவல்களை 011-2784208, 011-2784537, 011-2786616, 011-2786200 அல்லது 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.