இந்த ஆண்டு நெடுஞ்சாலையில் நடந்த 12 விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர்.
நெடுஞ்சாலை விபத்துக்களில் 404 சொத்து சேதங்கள் பதிவாகியுள்ளதாகவும், பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துக்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் ஏற்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலான விபத்துக்களை தடுக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். விபத்துக்களின் அடிப்படையிலான உண்மைகளை ஆராய்ந்த போது, இரண்டு முக்கிய காரணிகளால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவற்றுள் ஒன்று கவனக்குறைவாகவும் வாகனம் செலுத்துவது எனவும், இரண்டாவது சாரதியின் அதிகப்படியான சோர்வு எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் என்றும், விரைவுச்சாலையின் வேகம் சாதாரண சாலையின் வேகத்தை விட அதிகமாக இருப்பதால், அந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டால், இழப்பு ஏற்படக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், சாரதிகள் எந்த நேரத்திலும் சோர்வுடன் வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும், போக்குவரத்து சட்டத்திற்கு அமைவாக கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கோரியுள்ளார்.