தெலங்கானாவில் எலி கடித்த மாணவிக்கு தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்!
எலி கடித்த மாணவிக்கு தடுப்பூசி போட்டதால் பக்கவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ஒரு அரசு விடுதி ஒன்ரு இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர். அதில் லக்ஷ்மி பவானி கீர்த்தி என்ற மாணவி இங்கு தங்கி லக்ஷ்மி பவானி கீர்த்தி என்ற மாணவி வந்து இருக்கிறார்.
இந்த நிலையில், விடுதிக்குள் நாளுக்கு நாள் எலித் தொல்லை அதிரித்து வந்துள்ளது. அதனை தாங்க முடியாமல் மாணவிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். அதாவது இரவு நேரத்தில் அறைக்குள் புகுந்து எலிகள் மாணவிகளை கடித்து வைப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.
இதில் மாணவி கீர்த்தியை கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் சுமார் 15 முறை எலி கடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் எலி கடித்ததற்கு மாணவிக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதை தொடர்ந்து, எலி கடித்ததால் அவருக்கு செலுத்தப்பட்ட மருந்துகள் உடம்பில் எதிர்வினையாற்றி உள்ளது. இதன் காரணமாக கீர்த்திக்கு பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் புவ்வாடா அஜய் குமாரின் தலையீட்டுக்கு பின்னர், மாணவி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் கீர்த்தியின் உடல்நிலை சற்று முன்னேற்றம்
அடைந்திருப்பதாகவும் மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும், நரம்பியல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.