திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை!
திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
திருநெல்வேலியில் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்காக, வெள்ளிக்கிழமை (டிச. 20) காலை 10.15 மணிக்கு பாளையங்கோட்டை அருகே உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
கொலை செய்யப்பட்டவரின் சிதைந்த நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றனர். கொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் இருந்ததையும் மீறி, இவ்வாறான துணிகரச் சம்பவம் நடந்தேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த கொலை சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக இந்த படுகொலை சம்பவம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், நீதிமன்றத்தில் காவல்துறையினர் சரிவரச் செயல்படவில்லை எனக் கூறி, வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையும் நடைபெற்று வருகிறது.