கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்த விபத்தில் ஒருவர் பலி,
ஜெர்மனியில் மார்க்கெட்டில் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது. ஜெர்மனியின் கிழக்கு மாகாணத்தின் மெக்டிபெர்க் என்ற நகரில் பிரபல மார்க்கெட் உள்ளது .கிறிஸ்துஸ்மஸ் பண்டிகையையொட்டி இங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த கார் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்ததில் ஒருவர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களின் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.