ஜனாதிபதி அடுத்த மாதம் சீனா செல்கிறார்
2025 ஜனவரியில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (20) பிற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து மல்வத்து சமய மகாநாயக்க தேரரை தரிசித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த வாரம் இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கை அரசாங்கம் என்ற ரீதியில் திறந்த நிலையில் அனைத்து நாடுகளுடனும் நட்பை வளர்த்துக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.