திருட்டு இறைச்சி பொதியோடு வசமாக சிக்கிய போலீஸ் உத்தியோகத்தர்.

நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டு சென்றபொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில் வைத்து சோதனையிட்ட போது , அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிவந்த படகில் விடுமுறையில் செல்வதற்காக வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டுவந்த பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகம் தெரிவித்து குறிகாட்டுவான் துறைமுகப்பகுதியில் வைத்து, கடந்த பல நாட்களாக கால்நடைகளை பறிகொடுத்த இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் பரிசோதனை செய்தபோது இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் குறித்த பொலிசாருடன் , பொதியும் குறிகாட்டுவானில் கடற்படையினரின் உதவியுடன் தடுத்து வைத்துவிட்டு யாழ். அரச அதிபர், நெடுந்தீவு பிரதேச செயலருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் , இது தொடர்பாக வேலணை பிரதேச செயலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இதன் அடிப்படையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறிகாட்டுவான் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் நெடுந்தீவில் ஆடு காணாமல் போன இளைஞரிடம் முறைப்பாட்டினை பெற்றதுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சியினை ஆட்டிறைச்சியா மாட்டிறைச்சியா என ஆய்வு செய்தபின்னர் நாளையதினம் தகவல் வழங்குவதாக தெரிவித்ததுடன் குறித்த இளைஞர்களை செல்லுமாறு அனுப்பிவைத்துள்ளதாக தெரியவருவதுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அலுவலரின் விடுமுறை இரத்து செய்யப்பட்டு அவர் குறிகாட்டுவான் பொலிஸ் சாவடியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இறைச்சி பகுப்பாய்வின் பின்பே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக என தகவல்கள் தெரவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.