எலோன் மஸ்க்கின் Starlink இலங்கைக்கு வருவதில் இழுத்தடிப்பு

பிரபல வர்த்தகர் எலோன் மஸ்க்கின் Starlink செய்மதி இணைய சேவைக்கு இலங்கையில் இயங்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ள போதிலும், தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அந்த நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை விநியோக அனுமதியை உத்தியோகபூர்வமாக வழங்கியது.

இலங்கையில் அதற்கான சேவைகளை வழங்குவதற்கு அனுமதிக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தமும் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

குறித்த உபகரணங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியும் என தெரிவித்த போதிலும் இதுவரை அதற்கு எலோன் மஸ்க்கின் தரப்பு பதிலளிக்கவில்லை என இலங்கை சுங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.