சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒன்பது மீனவர்கள் கைது .

திருகோணமலை அலஸ்வத்தை கடற்பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒன்பது (09) பேருடன் இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை விஜயபா திருகோணமலை அலஸ்வத்தை கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த ஒன்பது (09) மீனவர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படை மூலம். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 முதல் 43 வயதுக்கு இடைப்பட்ட கிண்ணியா பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களுடன் இருந்த டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.