இறால் மசாலா கறி செய்வது எப்படி ….

தேவையான பொருட்கள்::::

இறால் அரை கிலோ
எண்ணெய் தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பு+ன்
தக்காளி 2
குடைமிளகாய் 1
மல்லித் தூள் 3 டேபிள் ஸ்பு+ன்
தேங்காய்; துருவல் 1 கப்
சீரகம் 2 தேக்கரண்டி
வெந்தயம் அரை டீஸ்பு+ன்
மிளகு 1 டீஸ்பு+ன்
சீரகம் அரை டீஸ்பு+ன்
கொத்தமல்லித் தழை 1 கைப்பிடி
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை ::::

இறாலை தோல் நீக்கி, நன்கு கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்….

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்….

வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மசாலா போல் அரைத்துக் கொள்ளவும்….

தேங்காய்த் துருவலை சிறிது தண்ணீர் விட்டு, விழுதாக தனியாக அரைத்துக் கொள்ளவும்….

சீரகம், வெந்தயம், மிளகு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கி தனியாக வைக்கவும்….

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை நன்கு வதக்கவும்….

பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்….

பின்னர் அரைத்த வைத்த மசாலாவைத் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு இறாலைச் சேர்த்து, நன்கு வதக்கவும்….

இறால் கலவையில் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு பிரட்டவும்….

இறால் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து கொத்தமல்லித் தழைத் தூவி இறக்கவும்….

இறால் மசாலா கறி ரெடி…..

Leave A Reply

Your email address will not be published.