உத்தரப் பிரதேசத்தில் கடுமையான சாதி பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளான தலித் சிறுவன் தற்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் கடுமையான சாதி பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளான தலித் சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம், குஷிப்பூர் மாவட்டம், கப்டங்கஞ்ச் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமத்தில் ஆதித்யா என்ற சிறுவனை பிறந்த நாள் விழாவுக்கு அழைத்துள்ளனர்.

அந்த விழாவுக்கு சென்ற ஆதித்யாவை நிர்வாணப்படுத்தி, அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவன் மீது சிறுநீர் கழித்துள்ளனர்.

இதையடுத்து வீடு திரும்பிய ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆதித்யாவின் உறவினர் விஜய் குமார் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

”பிறந்த நாள் விழாவில் இப்படி நடக்கும் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் டிசம்பர் 20 அன்று நடந்தது, ஆனால், மறுநாள்தான் இதுபற்றி எங்களுக்கு தெரியவந்தது. ஆதித்யா தனக்கு நடந்ததை வீட்டில் கூறிய பிறகுதான் தெரியவந்தது.

நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் ஆதித்யாவை துன்புறுத்தினர். இதனால் அவன் தற்கொலை செய்து கொண்டான்” எனத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தரப்பில் கூறியதாவது, “ஆதித்யா என்ற சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டின் காரணமாக நடந்திருக்கலாம்” என்று சந்தேகிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.